பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலதிக பஸ்கள் சேவையில்

0
சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் முன்னனெடுக்கபடவுள்ளன.
பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நன்மை கருதி மேலதிகமாக 695 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
மக்களின் தேவை கருதி விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக்க தெரிவித்தார்.
புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடத்திலுள்ள அலுவலகத்தில் விசேட பஸ் சேவைகள் குறித்து தகவல்களை பெற்றுக் கொள்ளமுடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அதிவேக வீதிகளூடான பஸ் சேவைகளையும் விஸ்தரித்துள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இன்றைய தினம் விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய 24 விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜயசமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இன்றிரவு 10 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான விசேட ரயில் சேவை முன்னெடுக்கபடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் எதிர்வரும் 17 ஆம் திகதி இரவு 8 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இன்று நள்ளிரவுக்கு முன்னர் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் கெமுனு விஜேவர்தன கூறியுள்ளார்.
தூர பிரதேசங்களுக்கான பஸ் சேவைகளுடன் குறுந்தூர பஸ் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பண்டிகை கால கொள்வனவில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலுருந்து பயணிப்போரும் போக்குவரத்து சிக்கலை எதிர்நோக்குகின்றமை கருத்திற் கொண்டு விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் கெமுனு விஜேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa